2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்
Oct 17, 2026, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

Manikandan by Manikandan
Jul 18, 2026, 09:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ‘ராயன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‛அமரன்”, தனுஷின் ‛கேப்டன் மில்லர்”, விஜய் சேதுபதியின் ‛மகாராஜா”, கார்த்தியின் ‛மெய்யழகன்” ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளன.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக நடிகர் மம்மூட்டி பெறுகிறார்.

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளியான ‛மெய்யழகன்” படத்திற்கு சிறந்த ஒலிக்கலவை கிடைத்துள்ளது. இதே பிரிவில் இந்த படத்திற்கு சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்காக சுரன் ஜி தேர்வாகி உள்ளார்.

கேப்டன் மில்லர் படத்துக்காக நடிகர் தனுஷ் ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார்.

அதுமட்டுமன்றி, சமூக மாற்றத்திற்கான பட பிரிவில் கேப்டன் மில்லர் தேர்வாகியுள்ளது. இதுதவிர சிறந்த தமிழ் படமாக தனுஷ் இயக்கி, நடித்த ராயன் படம் தேர்வாகி உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம், 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளைக் குவித்துள்ளது.

அந்த வகையில், சிறந்த இயக்குனராக அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தேர்வாகியுள்ளார்.

சிறந்த படங்களின் வரிசையில், ஹிந்தியில் வெளியான ஆர்டிக்கிள் 370 தேர்வாகியுள்ளது. இதுதவிர சிறந்த பொழுதுபோக்கு படமாக கல்கி 2898 ஏடி தேர்வாகியுள்ளது

சிறந்த நடிகை பிரிவில் ஆர்டிக்கிள் 370 படத்தில் நடித்த யாமி கவுதமும், சிறந்த துணை நடிகை பிரிவில் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸும் தேர்வாகியுள்ளனர்.

இதேபோல, சிறந்த ஆக்ஷன் பிரிவில் மகாராஜா படத்தின் சண்டை பயிற்சியாளர் அனல் அரசு தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.

சிறந்த பின்னணி இசை பிரிவில் அமரன் படத்தில் சிறப்பாக இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர சிறந்த இசை பிரிவில் ஆர்டிக்கிள் 370 படத்துக்கு இசையமைத்த சஷ்வத் சஜ்தேவ்,

சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவில் புஷ்பா 2 ஆடை வடிவமைப்பாளர்கள் தீபாலி நூர், ஷீத்தல் ஷர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

சிறந்த படத்தொகுப்பு பிரிவில் அமரன் படத்துக்காக கலைவாணன் தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.

லக்கி பாஸ்கர் திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு சிறந்த வசனத்துக்காக தேசிய விருது வழங்கப்படவுள்ளது.

Non – Feature Film பிரிவில் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய
விருது `ப்ளூ’ தமிழ்ப் படத்துக்காக டி.எஸ்.ஹரிஹர சுதனுக்கு வழங்கப்படவுள்ளது.

Tags: Rayandhanushnational film awardSivakarthikeyanamaran
Share
Tweet
SendShare
Previous Post

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies