அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?
Oct 17, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

Manikandan by Manikandan
Feb 13, 2026, 08:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா தனது நன்மைகளுக்காக பாகிஸ்தான் டாய்லெட் பேப்பர் போன்று பயன்படுத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா மீது பாகிஸ்தானின் திடீர் கோபத்திற்கு காரணம் என்ன?

அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது முதல், வாஷிங்டன் உடனான உறவு பாகிஸ்தானுக்கு கசப்பை ஏற்படுத்தி வருகிறது… இந்த சூழலில் அண்மையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், அமெரிக்கா, பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட மோசமாக நடத்தியதாகக் கூறினார். இந்த தகவல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1999ம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு வாஷிங்டனுடன் இஸ்லாமாபாத் நல்லுறவை பேண முயன்றதாகக் கூறினார். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் உடனான உறவு, நாட்டிற்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தியதையும் நினைவு கூர்ந்தார்.. அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாட்டை அதன் நன்மைக்காக சுரண்டுவதாக குற்றம்சாட்டிய கவாஜா ஆசிப், அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறிய பின்னர் டாய்லெட் பேப்பரை போன்று பாகிஸ்தானை தூக்கி எறிந்துவிட்டதாக கடுமையாக சாடினார்… பாகிஸ்தான் பெரும்பாலும், அதன் பயங்கரவாத வரலாற்றை மறுக்கிறது என்றும், இது கடந்த காலத்தில் சர்வாதிகாரிகள் செய்த தவறு என்பதையும் ஒப்புக்கொண்டார்…

2001-ம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் போரில், பாகிஸ்தான் இணைந்ததாகவும், அந்த செயல்பாடு தாலிபான்களுக்கு எதிராக திரும்பியதாகவும் கவாஜா ஆசிப் குறிப்பிட்டார்.. ஆப்கானிஸ்தான் போருக்கு பின் பல ஆண்டுகளுக்கு பிறகு பிராந்தியத்லிருந்து அமெரிக்கா வெளியேறியபோதும், பாகிஸ்தான் நீண்டகால வன்முறை, தீவிரவாதம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டு போர்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ள கவாஜா ஆசிப், இன்று பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதம் கடந்தகால தவறுகளுக்கு பதிலடி என்றும் ஒப்புக்கொண்டார்.

ஆப்கானிஸ்தான் உடனான மோதலில் பாகிஸ்தானின் ஈடுபாடு என்பது மதக் கடமையால் உந்தப்பட்டது என்றும் அவர் நியாயப்படுத்த தவறவில்லை.. ஜிகாத் என்ற கொடியின் கீழ் பாகிஸ்தானியர்கள் போராட அனுப்பப்பட்டதை பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக் கொண்டார். ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகிய இரண்டு முன்னாள் ராணுவ சர்வாதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் இணைந்ததாகவும், அவர்கள் இஸ்லாத்திற்காக இணையவில்லை மாறாக, அமெரிக்காவை திருப்திபடுத்தவே இணைந்ததாகவும் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். பயங்கரவாதம் என்பது கடந்த காலத்தில் சர்வாதிகாரிகள் செய்த தவறுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி என்று அமைச்சர் கூறினார்.

இஸ்லாமாபாத் சந்தித்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது என்று கூறிய ஆசிஃப், பாகிஸ்தானின் தவறுகளை ‘மீளமுடியாதவை’ என்று குறிப்பிட்டார்… இந்தப் போர்களை நியாயப்படுத்த பாகிஸ்தானின் கல்வி முறை மறுவடிவமைப்பு செய்யப்பட்டதாகவும், இன்றும் உட்பொதிக்கப்பட்ட சித்தாந்த மாற்றங்களுடன் இருப்பதாகவும் ஆசிஃப் குறைகூறினார்… பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள், இந்தியாவுக்கு எதிரான இஸ்லாமாபாத்தின் செயல்பாட்டையும் பிரதிபலிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது…

Tags: toilet paperstrongly accusedDefense Minister Khawaja AsifpakistanusDefense Ministerpakistan newsbenefits
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு!

Next Post

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies