பிரதமர் நரேந்திர மோடியை செக் குடியரசின் பிரதமர் பீட்டர் ஃபியாலா சந்தித்தார்!
Sep 9, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை செக் குடியரசின் பிரதமர் பீட்டர் ஃபியாலா சந்தித்தார்!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 08:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி, 10-வது துடிப்பான குஜராத் உச்சிமாநாடு 2024-ன் செக் குடியரசின் பிரதமரைச் சந்தித்தார்.

செக் குடியரசின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, 2024 ஜனவரி 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநாட்டின் போது இன்று (10.01.2024) செக் குடியரசின் பிரதமர்  பியலாவைச் சந்தித்தார். அறிவுப்பகிர்வு, தொழில்நுட்பம், அறிவியல் போன்றவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் செக் குடியரசைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்திய உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சி வேகம் அதிகரிப்பு மற்றும் செக் குடியரசின் வலுவான தொழில்துறை அடித்தளம் ஆகியவை உலகளாவிய விநியோக சங்கிலியில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுமைக் கண்டுபிடிப்பு குறித்த இந்தியா-செக் குடியரசு உத்திசார் கூட்டு செயல்பாட்டுக்கான கூட்டு அறிக்கை இருதரப்பு உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

புத்தொழில் மற்றும் புத்தாக்கம், இணையதளப் பாதுகாப்பு, டிஜிட்டல் தளங்கள், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதை இந்த கூட்டு அறிக்கையின் செயல்திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

செக் குடியரசின் பிரதமர் ஃபியாலா ஜெய்ப்பூருக்கும் செல்லவுள்ளார். அங்கு தேசிய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (NIMS) அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் பங்கேற்காது: ஜெய்ராம் ரமேஷ்!

Next Post

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைகின்றனர்! – மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies