அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் பங்கேற்காது: ஜெய்ராம் ரமேஷ்!
Nov 2, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் பங்கேற்காது: ஜெய்ராம் ரமேஷ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 08:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் திறப்பு விழாவிலும், கும்பாபிஷேகத்திலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதையொட்டி, நாட்டிலுள்ள வி.வி.ஐ.பி.க்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்க பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இதுவரை 7,000 பேருக்கு மேல் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு விட்டது.

அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌதிரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அழைப்புகள் குறித்து சரியான நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அயோத்தி கோவில் நிகழ்வில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “கடவுள் இராமரை பல லட்சம் மக்கள் வழிபடுகிறார்கள்.

மதம் என்பது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இராமர் கோவிலை அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது. முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படாத கோவிலுக்கு திறப்புவிழா நடத்துவதற்கு மக்களவைத் தேர்தல் மட்டுமே காரணம்.

எனவே, இந்த அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் மரியாதையுடன் மறுக்கின்றனர். மேலும், இது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: CongressRam TempleAyodyaIgnored
Share
Tweet
SendShare
Previous Post

உடல் தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்!

Next Post

பிரதமர் நரேந்திர மோடியை செக் குடியரசின் பிரதமர் பீட்டர் ஃபியாலா சந்தித்தார்!

Related News

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies