குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக காந்திநகர் அருகே உள்ள GIFT சிட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, அகமதாபாத் மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
இந்த மலர் கண்காட்சியில், ஒரு வசீகரிக்கும் நுழைவாயில் உள்ளது. கூடுதலாக, சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை, புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மோதேரா சூரியக் கோயில், சந்திரயான்-3, ஒலிம்பிக் பிரதிகள் ஆகியவை மலர்களால் செய்யப்பட்டுள்ளது.
இந்த மலர் கண்காட்சியில் 15 லட்சத்திற்கும் அதிகமான பல்வேறு மலர் செடிகளில் ஈர்க்கக்கூடிய தொகுப்பைக் கொண்டுள்ளது. பெட்டூனியா, கசானியா, பெகோனியா, டோரேனியா, சாமந்தி, லில்லியம், ஆர்க்கிட், டேலியா, அமரில்லிஸ், கற்றாழை செடி, ஜெர்பரா மற்றும் பல்வேறு அயல்நாட்டு மலர்கள் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வகைகளை உள்ளடக்கியுள்ளது.
மேலும், 700,000 மரக்கன்றுகளால் உருவாக்கப்பட்ட 400 மீட்டர் நீளமுள்ள மலர் அமைப்பை இந்த மலர் கண்காட்சி காட்சிப்படுத்துகிறது.
கண்காட்சி முழுவதையும் பிரதமர் நரேந்திர மோடி நடந்து சென்று பார்வையிட்டார்.