மக்களவையில் புகைகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 13-ம் தேதி மக்களவை நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது சாகர் சர்மா, மனோரஞ்சன், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.குற்றம்சாட்டப்பட்ட 6 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன் அமோல் ஷிண்டே, லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகிய 5 பேருக்கும் பாலிகிராப் சோதனை, சாகர் மற்றும் மனோரஞ்சன் ஆகியோருக்கு நார்கோ அனாலிசிஸ் மற்றும் மூளை மேப்பிங் சோதனை நடத்த அனுமதி வழங்கியது.
குற்றம்சாட்டப்பட்டவர்களிட்ம் குஜராத்தில் நார்கோ பகுப்பாய்வு சோதனை இன்று நடந்து வருகிறது. இதற்காக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழு குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர். இந்த விசாரணை நாளை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.