தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தி மு க அரசு ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விட சான்று தேவையா? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
கிறிஸ்துவ மதத்தின் கடவுளை வணங்கி வழிபட சென்ற திரு. @annamalai_k அவர்கள் மீது பொது அமைதியை குலைக்க முயன்றதாக வழக்கு தொடுத்துள்ளது தமிழக அரசு. கடவுள் அனைவருக்கும் சமம், அனைவருக்கும் ஆலய பிரவேசம் உரிமை எனும் போது, அண்ணாமலையை தடுத்து நிறுத்த எத்தனித்தவர்கள் மீது நடவடிக்கைகள் பாய…
— Narayanan Thirupathy (@narayanantbjp) January 11, 2024
இது தொடர்பாக, தமிழக பாஜக துணத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள X பதிவில்,
கிறிஸ்துவ மதத்தின் கடவுளை வணங்கி வழிபட சென்ற அண்ணாமலை மீது பொது அமைதியை குலைக்க முயன்றதாக வழக்கு தொடுத்துள்ளது தமிழக அரசு. கடவுள் அனைவருக்கும் சமம், அனைவருக்கும் ஆலய பிரவேசம் உரிமை எனும் போது, அண்ணாமலையை தடுத்து நிறுத்த எத்தனித்தவர்கள் மீது நடவடிக்கைகள் பாய வேண்டியதற்கு மாறாக, அண்ணாமலையை மிரட்டி பார்ப்பது சட்ட விரோதம். கடவுளை வணங்க சென்ற, கிருஸ்துவ மதத்தை போற்ற சென்ற அண்ணாமலை மீது வழக்கு தொடுப்பதும், ஹிந்து மதத்தை (சனாதன தர்மத்தை) ஒழிப்பேன் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினை போற்றுவதும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை!! தி மு க அரசு ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விட சான்று தேவையா? என குறிப்பிட்டுள்ளார்.