மகாராஷ்டிராவிற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலத்தைத் திறந்து வைக்க உள்ளார்.
அடல் பாலம் மொத்தம் 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும்.
முன்னாள் பிரமதர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக அடல் சேது பாலம் என்று அழைக்கப்படும் இந்தப் பாலம், மும்பையில் நாளை பிரதமர் மோடி 3:30 மணிக்குத் திறந்து வைக்க உள்ளார்.
நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மக்களின் ‘போக்குவரத்தை எளிதாக்குவது’ பிரதமரின் தொலை நோக்குப் பார்வையாகும்.
இதற்கேற்ப, இப்போது ‘அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலம்’ என்று பெயரிடப்பட்ட மும்பை டிரான்ஸ்ஹார்பர் இணைப்புப் பாலம் (துறைமுகங்களை இணைக்கும் பாலம்) கட்டப்பட்டுள்ளது. 2016 டிசம்பரில் இந்தப் பாலத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும், இது கடலில் சுமார் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கி.மீ நீளமும் கொண்டது.
இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும். இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும்.
மேலும் மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.