சவுதி கடற்படையின் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி இந்தியாவில் 4 நாள் பயணம் மேற்கொண்டு வருகிறார். சவூதி அரேபியா, இந்தியக் கடற்படைகளுக்கு இடையேயான நீண்டகால உறவுக்கு இப்பயணம் ஒரு சான்றாகும்.
அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி இன்று புதுதில்லியில் இந்தியக் கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமாரை சந்தித்து, கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள், நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாலி, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி, பாதுகாப்புத்துறைச் செயலாளர், விமானப்படைத் தளபதி, ராணுவத் துணைத் தளபதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.