அயோத்தி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் சிறப்பு வழிபாட்டை மோடி தொடங்கியுள்ளார்.140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக கடவுள் தம்மை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு வழிபாட்டை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அயோத்தியில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவுக்கு 11 நாட்களே உள்ளன. இந்த மங்களகரமான நிகழ்வை நானும் காணும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. கும்பாபிஷேகத்தின் போது அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை ஒரு கருவியாக மாற்றியுள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டை தொடங்குகிறேன். உங்கள் அனைவரிடமும் நான் ஆசீர்வாதங்களைத் தேடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த உணர்வை அனுபவிக்கிறேன். நான் ஒரு வித்தியாசமான பக்தியை அனுபவித்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்த உணர்ச்சிப் பயணம் (பாவ் யாத்ரா) உணர்தலின் ஒரு தருணம், வெளிப்பாடு அல்ல. அதன் ஆழம், பரவல், தீவிரம் ஆகியவற்றை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. என் நிலைமையை புரிந்து கொள்ள உங்களால் முடியும். பல தலைமுறைகள் வாழ்ந்த கனவை, அடையும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.
நமது சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, யாகம் மற்றும் கடவுள் வழிபாட்டிற்காக நம்மில் தெய்வீக உணர்வை எழுப்ப வேண்டும். இதற்காக, புனித நூல்களில் விரதங்கள் மற்றும் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளன, அவை பிரதிஷ்டைக்கு முன் பின்பற்றப்பட வேண்டும். எனவே, சில துறவிகள் மற்றும் பெரிய மனிதர்கள் பரிந்துரைத்த வழிகாட்டுதலின்படி, இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு சடங்குகளை தொடங்குகிறேன்.
இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், நான் கடவுளின் காலடியில் பிரார்த்தனை செய்கிறேன். முனிவர்கள் மற்றும் துறவிகளின் நற்பண்புகளை நான் நினைவு கூர்கிறேன், மேலும் கடவுளின் வடிவமான மக்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
प्राण-प्रतिष्ठा से पूर्व 11 दिवसीय व्रत अनुष्ठान का पालन मेरा सौभाग्य है। मैं देश-विदेश से मिल रहे आशीर्वाद से अभिभूत हूं। https://t.co/JGk7CYAOxe pic.twitter.com/BGv4hmcvY1
— Narendra Modi (@narendramodi) January 12, 2024