இந்தியாவில் நாம் அன்னிய பொருட்களை நிராகரித்து இந்திய பொருட்களை பயன்படுத்த வேண்டும் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
நமக்கெல்லாம் படிப்பினையான ஒரு சம்பவம் பெருந்தலைவர் காமராஜர் வரலாற்றில் சொல்வதுண்டு!
ஒருமுறை பிரதமர் ஜவர்ஹர்லால் நேரு வருத்தத்துடன் கூடிய சிந்தனையில் இருந்ததை கவனித்த பெருந்தலைவர் காமராஜர், “என்ன பிரச்சனை?” என்று நேருவிடம் கேட்டாராம்! “செய்துக்கொண்ட ஒப்பந்தப்படி அமேரிக்கா நடந்துக்கொள்ள மறுக்கிறது! கோதுமை தர மறுக்கிறார்கள்!” என்பதுதான் நேருவின் வேதனைக்கு காரணம்!
படிக்காத காமராஜர் கேட்டாராம் “அவன் கடை இங்கு ஏதாவது இருக்கிறதா?” என்று! அமேரிக்கா இந்தியாவில் ஏதாவது வியாபாரம் செய்கிறதா? என்பதுதான் காமராஜரின் கேள்வி! நேரு சொன்னாராம், “இருக்கிறதே, அமேரிக்கன் பேங்க் இந்தியாவில் இருக்கிறது” என்று! உடனே காமராஜர் சொன்னாராம் ”அந்த ”அவன் பேங்கை” இங்கே மூடிவிடுங்கள்! அப்படி அறிவிப்பு வெளியிடுங்கள், வழிக்கு வருவான்” என்று! நேருவும் அப்படி செய்து அமேரிக்காவை பணிய வைத்தாராம்!
சீனாவிடம் போய் நின்று வாலாட்டிய நாய் குட்டிதான் மாலத்தீவு! மொத்தம் 3.5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நாடுதான் அது! மொத்தத்தில் நமது செங்கல்பட்டு மாவட்டத்தின் பரப்பளவுதான் அந்த மாலதீவுகளின் மொத்த பரப்பளவும் இருக்கும்! அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது இந்தியாதான்! இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசமாக இருந்திருக்க வேண்டிய இந்தியாவின் பகுதிதான் மாலத்தீவு! நமது முன்னோர்களின் அளவுக்கு அதிகமான பரந்த மனப்பான்மை காரணமாகத்தான் மாலத்தீவு தனி நாடாக சொல்லப்படுகிறது!
இந்திய ராணுவம்தான் மாலத்தீவின் ராணுவமாக விளங்குகிறது! 1988ல் மாலத்தீவு சில இலங்கை கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டபோது இந்தியாதான் மீட்டுத்தந்தது! 2021 மாலத்தீவின் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்து கடுமையான தண்ணீர் பஞ்சம் வந்தபோது ஆகாய விமானத்தில் அவசரமாகவும் கப்பலிலும் குடிநீர் வழங்கியது பாரத தேசம்!
நன்றி கெட்டத்தனமாக சீனாவிடம் வாலாட்டி சீனாவின் ராணுவ நிலையை மாலத்தீவில் அமைக்கும் சதித்திட்டத்தில் மாலத்தீவு உடன்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது! எனவேதான் மாலத்தீவின் இந்திய சுற்றுலா கடையை மூடிவிட பாரதத்தந்தை நரேந்திரமோடி முடிவு செய்தார்! மாலத்தீவின் சுற்றுலாவே இந்தியாவை நம்பிதான் இருக்கிறது! அங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பாதிபேர் இந்தியர்கள்! சுற்றுலா வருமானத்தை தவிர்த்து அங்குள்ள மக்களுக்கு வேறு வருமானம் எதுவும் விசேசமாக இல்லை!
2024 ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள் புத்தாண்டின் முதல் அரசு நிகழ்சியாக தமிழகம் திருச்சிக்கு வந்து, திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை திறந்து வைத்து திருச்சி விமான நிலையத்தை உலக தரத்திற்கு உயர்த்துதல் உட்பட, 20,000 கோடி ரூபாய் அளவுக்கான பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அர்ப்பணம் செய்து, கேரளாவுக்கு அருகில் அரபிக்கடலில் இருக்கும் லட்சத்தீவு என்னும் இந்தியாவின் யூனியன் பிரதேசத்தில் கால் வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி!
அரசுமுறை பயணமாக லட்சத்தீவு சென்ற பிரதமர்! கடலில் நீந்தி, கடற்கரையில் அமர்ந்து அதன் அழகை ரசித்து தனது ”எக்ஸ்” வலைதளத்தில் பதிவிட்டார் மோடி! பலகோடி இந்தியர்கள் அந்த எக்ஸ் வலைதளத்தை பகிர்ந்தனர்! இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் ”டிரெண்ட்” ஆனது! உலக அளவில் லட்சத்தீவு முக்கியத்துவம் பெற்றது! மாலத்தீவின் இந்திய சுற்றுலா கடை மூடப்படுமோ என்னும் சந்தேகம் மாலத்தீவு அரசுக்கு தோன்றியது!
மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் கேவலமாக பதிவிட்டனர்! இந்திய பிரதமர் நரேந்திரமோடியை விமர்சித்தனர்! மோடிஜியை மரியாதைக்குறைவாக விமசித்த அந்த மூன்று அமைச்சர்களையும் கண்டித்து இந்தியர்கள் கொதித்து எழுந்தனர்! கண்டனங்கள் பறந்தன! I.N.D கூட்டணியின் சரத்பவாரும் கண்டித்தார்!
இந்திய கண்டனம் என்னும் சுனாமியால் மாலத்தீவே காணாமல் போய்விடுமோ என்னும் நிலை ஏற்பட்டது! பயந்துப்போன, மாலத்தீவு நிர்வாகம் அந்த மூவரையும் பதவி நீக்கம் செய்தது!
இந்தியர்களால் மாலத்தீவு ஹோட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த 16500 முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டது! இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு பறக்க திட்டமிடப்பட்டிருந்த 3500 விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டன! ”மேக் மை டிரிப்” என்னும் பிரபலமான சுற்றுலா நிறுவனம் தனது மாலத்தீவு தொடர்பை துண்டித்தது! மொத்தத்தில் காமராஜர் சொன்னதுபோல மாலத்தீவு இந்திய சுற்றுலாக்கடை மூடப்பட்டுவிட்டது! இந்த முன்பதிவு ரத்து போன்ற நடவடிக்கைகள் எல்லாம் பாரத அரசு செய்ததல்ல! தேச பற்று மிக்க இந்தியர்கள் செய்தது!
இந்த நேரத்தில் நான் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் கேள்விப்பட்ட தகவல் இது! ஜப்பானியர்கள் அதிக தேசப்பற்று மிக்கவர்களாம்! அவர்களின் நாட்டில் விற்பனையாகும் அன்னிய பொருட்களை வாங்க மாட்டார்களாம்! விலை அதிகமாக இருந்தாலும் ஜப்பானிய பொருட்களைத்தான் வாங்குவார்களாம்! குறிப்பாக ஜெர்மானிய கார்கள் அங்கே குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டபோது,
ஜப்பானியர்கள் அந்த கார்களை வாங்கி உபயோகிக்காமல் ஜப்பான் தயாரிப்புகளைத்தான் அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகித்தார்கள், என சொல்லப்பட்டது! இது ஜப்பானியர்களின் தேசப்பக்தியை காட்டுகிறது! இந்தியாவில் நாமும் அவ்வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் அன்னிய பொருட்களை நிராகரித்து இந்திய பொருட்களை பயன்படுத்த வேண்டும்! என்னும் அடிப்படையில் இந்த செய்தியை நான் பல உரைகளிலும், கட்டுரைகளிலும் கண்டிருக்கிறேன்!
அந்த ஜப்பானிய தேசப்பக்தியை இன்று நமது பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நமது தேசத்தில் உருவாக்கிவிட்டார் என்பதைத்தான், இரண்டே நாளில், மாலத்தீவுக்கான 20,000 ஒப்பந்தம் ரத்து என்னும் செய்தி நமக்கு உணர்த்துகிறது!
லட்சத்தீவு கடத்தல்காரர்களின் மையபுள்ளியாக விளங்கியது! காங்கிரஸ் ஆட்சி காரணமாக லட்சத்தீவு அப்படி மாறியிருந்தது! பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வழிகாட்டுதலில், லட்சத்தீவுக்கான அதிகாரி பிரபுல் கோடா படேல் என்பவர், சீர்திருத்த சட்டங்களை கொண்டுவந்து, குற்றச்செயல்களை தடுத்து நீக்கி, ஒரு கட்டுப்பாட்டினை நிலை நாட்டினார்! கச்சத்தீவில் இந்த சீர்திருத்தம் 2021 நடந்தது!
கச்சத்தீவு இப்போது மாலத்தீவில் காலியாகும் இந்திய சுற்றுலா நடவடிக்கைகளை தன்னிடம் அமைத்துக்கொள்ள தயாராகி விட்டது! “ராஜா கைய வச்சா அது ராங்கா போவதில்லை!” என்பது திரைப்படப் பாடல்! ”மோடி கைய வச்சா அது ஜெயிக்காமல் போவதில்லை!” என்பது புதிய பாடல்! எனத் தெரிவித்துள்ளார்.