ஹைதராபாத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவான். கண்கண்ட கடவுளான சூரியனின் ஆற்றலே மழை பொழியவும் நிலம் செழிக்கவும் பயிர் விளையவும் உயிர்கள் வாழவும் காரணமாகிறது. அப்படிப்பட்ட சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் தமிழகம்,புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மக்களுக்கும் அவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.