இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 2ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 15ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 23ஆம் தேதி 4வது டெஸ்ட் போட்டியும், மார்ச் 7ஆம் தேதி 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்பாக இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்து இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியும், பின்னர் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியிலும் இந்திய ஏ அணி பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில் தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதிகள் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.எல். ராகுல், கே.எஸ். பரத், த்ருவ் ஜுரேல் என மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். அஸ்வின், ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி :
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில். யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்.
An action-packed Test series coming 🆙
Check out #TeamIndia's squad for the first two Tests against England 👌👌#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/vaP4JmVsGP
— BCCI (@BCCI) January 12, 2024