அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 40 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெறும் என காஞ்சி காமகோடி மட சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பை நான்கு பீடங்களின் சங்கராச்சாரியார்கள் நிராகரித்ததாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டியுள்ளன. ஆனால் இதனை அந்த பீடங்கள் மறுத்துள்ளளனன.
ராமரின் ஆசீர்வாதத்துடன், அயோத்தியில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து காசியில் உள்ள எங்கள் யாகசாலையும் 40 நாட்களுக்கு சிறப்பு வழிபாடுகளை நடத்த உள்ளதாக காஞ்சி காமகோடி மட சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார். லக்ஷ்மி காந்த் தீட்சித் உள்ளிட்ட வேத ஜீவிகளின் வழிகாட்டுதலின் கீழ் விழா நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
100க்கும் மேற்பட்ட அறிஞர்கள் யாகசாலையில் குழந்தை ராமர் பிரதிஷ்டை நாள் தொடங்கி 40 நாட்களுக்கு பூஜை செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள புனிதத் தலங்களின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும், அவரது தலைமையில் கேதார்நாத் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்களின் வளாகங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சங்கராச்சாரியார் கூறினார்.