தமிழகத்தில் விரைவில் 7 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காகவும், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வருகையில், தமிழகத்தில் மேலும் 7 புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஆரணி, விருத்தாசலம், கும்பகோணம், பழனி, பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம் மற்றும் கோவில்பட்டி ஆகிய 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாம். இதற்கான முறையான அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழகத்தில் ஏற்கனவே, 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், மேலும் 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது.
புதிய மாவட்டங்கள் அறிவிக்கும் போதே, அந்த அந்த மாவட்டங்களுக்கு பொறுப்பு கலெக்டர்களும், பின்னர், நிரந்தர மாவட்ட ஆட்சியர்களும் நியமிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.