9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளதாக வெளியான ஊடக செய்திகள் தவறானவை மற்றும் யூகத்தின் அடிப்படையானவை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இலக்காகக் கொண்டு 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி) தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கும் என்று சில ஊடக செய்திகள் யூக அடிப்படையில் வெளியாகியுள்ளன. இதுபோன்ற செய்திகளில் உண்மை ஏதுமில்லை.
நாட்டில் எச்.பி.வி தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. நாட்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிகழ்வுகளை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
மேலும் இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் பல்வேறு சுகாதாரத் துறைகளுடன் தொடர்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.