இந்தியா-அமெரிக்கா வர்த்தகக் கொள்கை மன்றத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான 14 வது கூட்டம்!
Apr 29, 2026, 03:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 இந்தியா-அமெரிக்கா வர்த்தகக் கொள்கை மன்றத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான 14 வது கூட்டம்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 இந்தியா-அமெரிக்கா வர்த்தகக் கொள்கை மன்றத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான 14 வது கூட்டம் நடைபெற்றது.

புதுதில்லியில் (டிபிஎஃப் ) 2024 ஜனவரி 12, அன்று இந்தியா – அமெரிக்கா வர்த்தகக் கொள்கை மன்றத்தின் அமைச்சர்கள் அளவிலான 14 வது கூட்டம்  நடைபெற்றது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் கேத்ரின் டாய் ஆகியோர் டிபிஎஃப் கூட்டத்திற்கு இணைத் தலைமை வகித்தனர்.

பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி தூதர் கேத்ரின் டாய் உடன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒரு சிறிய குழு கூட்டத்தையும் நடத்தியது.

இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துவதிலும், நாடுகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த பொருளாதார கூட்டாண்மையை உயர்த்துவதிலும் டிபிஎஃப்- ஐ திறம்பட செயல்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர். கூட்டத்திற்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

14வதுஇந்தியா – அமெரிக்கா டிபிஎஃப் விவாதங்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

முக்கியமான கனிமங்கள், சுங்கம் மற்றும் வர்த்தக வசதி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் உயர் தொழில்நுட்பதயாரிப்புகளில் வர்த்தகம் உள்ளிட்ட சில துறைகளில் எதிர்கால கூட்டு முன்முயற்சிகளைத் தொடங்குவதற்கான அடித்தளத்தைத் தொடர அமைச்சர்கள் உறுதிபூண்டனர்.

இதில் அமெரிக்காவும் இந்தியாவும் பொருளாதார ரீதியாக அர்த்தமுள்ள சாத்தியங்களை மேற்கொள்வதற்காக மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான லட்சிய மற்றும் தொலைநோக்கு செயல்திட்டத்தை உருவாக்கும்.

சர்வதேச ஆய்வகங்களின் முடிவுகளை பரஸ்பரம் அங்கீகரிப்பதைத் தொடரவும், சாத்தியமான போதெல்லாம் இருதரப்பு அடிப்படையில் பரஸ்பர அங்கீகார ஏற்பாடுகளை நிறுவவும் சுங்கவரி அல்லாத தடைகளைத் தணிக்க ஒரு கூட்டு வசதி முறையை நிறுவ அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

கேத்தரின் டாய் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தையும், ஜி 20 வர்த்தக மற்றும் முதலீட்டு பணிக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அம்சங்களையும் பாராட்டினார்.

குறிப்பாக வர்த்தக ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான உயர் மட்டக் கொள்கைகளை அவர் ஏற்றுக்கொண்டார். ஜி 20 முடிவுகளை இருதரப்பு ரீதியாக முன்னெடுப்பதன் மூலம் இந்தக் கொள்கைகளை மற்ற மன்றங்களில் செயல்படுத்துவதற்கான ஆதரவை மேலும் தொடர அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

சமூக பாதுகாப்பு முழுமைப்படுத்தல் ஒப்பந்தம் குறித்து நடந்து வரும் விவாதங்களின் ஒரு பகுதியாக அமெரிக்கத் தரப்பிற்கு இந்தியத் தரப்பில் கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

எதிர்கால ஒப்பந்தத்திற்கான ஈடுபாட்டை விரைவுபடுத்துவதையும் அவர்கள் ஊக்குவித்தனர். சமூக பாதுகாப்பு / மொத்தமயமாக்கல் ஒப்பந்தம் என்பது டி.பி.எஃப் இல் இந்தியத் தரப்பிலிருந்து வரும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும், இது நாடுகளுக்கு இடையிலான சேவை வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரியும் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவுவதற்கும் கணிசமாக பங்களிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Camaraderieshared prosperity & a stronger India-US partnership!
ShareTweetSendShare
Previous Post

9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி? – கட்டுக்கதையும் உண்மையான நிலவரமும்!

Next Post

உலக சாதனை படைக்கவிருக்கும் ரோகித் சர்மா!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies