சென்னையில் வேப்பேரியில் மருந்து மொத்த வியாபாரம் செய்யும் நிர்மல் என்பவரது வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள வசந்தி திரையரங்கம் அருகே உள்ளது மருந்து மொத்த வியாபாரம் செய்யும் நிர்மல் என்பவரது வீடு.
இந்த நிலையில், நிர்மல் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அந்த குண்டு வெடிக்க உள்ளதாகவும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மர்ம நபர் போன் செய்துள்ளார்.
இதனால், உஷாரான போலீசார், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
மருந்து மொத்த வியபாரம் செய்யும் நிர்மல் என்பவர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு வெடிகுண்டு உள்ளதா என்பதைகண்டறிய வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், அருகிலுள்ள அனைத்து வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். போலீசாரின் திடீர் சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.