அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 74 சதவீதம் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆயுர்வேத அறக்கட்டை இஸ்லாமிய மக்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. அதில், மக்களின் ஒவ்வொரு மூலையிலும் பகவான் ராமர் இருக்கிறார் என்றும்,அயோத்தி ராமர் கோவில் கட்டுவதில் 74 சதவீத முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் உள்ள ராமர் கோயில் இந்துக்களின் நம்பிக்கையின் மையம் என்றும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்றும் சர்வே கூறுகிறது.
70 சதவீத முஸ்லிம்கள் மோடி அரசை நம்புவதாகவும், இஸ்லாத்தின் பெயரால் அரசியல் செல்வாக்கு செலுத்த முயலும் உலமாக்கள், மௌலானாக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று எண்ணற்ற முஸ்லிம்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி என்றும், அவரது வார்த்தைகளை இந்தியா மட்டுமல்ல, முழு உலகமும் ஏற்றுக்கொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். அனைவருக்கும் சமமான வளர்ச்சி வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.