ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்று நடைப்பெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
கத்தாரில் ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்கேற்றுள்ளது.
இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான கத்தார், சீனா, தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் அணிகள் பங்குபெற்றுள்ளது. ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது.
‘சி’ பிரிவில் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங் காங், பாலஸ்தீனம் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது. ‘டி’ பிரிவில் ஜப்பான், இந்தோனேஷியா, ஈராக், வியட்நாம் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது.
‘இ’ பிரிவில் தென் கொரியா, மலேசியா, ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது. ‘எப்’ பிரிவில் சவூதி அரேபியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஓமான் அணிகள் பங்குபெற்றுள்ளத்து.
இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடுமையாக மோதி கொண்டனர் இதில் இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தார்கள்.
ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் இந்திய வீரர் சுரேஷின் தமக்கு கிடைத்த பிரீ கீக் வாய்ப்பை கோலாக மாற்ற தவறினார். இதேபோன்று ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த பிரீ கீக் வாய்ப்பு வீணானது. இதைப் போன்று போட்டியின் 34-வது நிமிடத்தில் இந்திய வீரர் குருபித் சிங் அடித்த கோலும் தவறியது.
இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் பகுதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதை அடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஜாக்சன் இர்வின் போட்டியின் 50-வது நிமிடத்தில் அபாரமாக கோலடித்து ஆஸ்திரேலியாவின் கணக்கை தொடங்கினார்.
இதேபோன்று போட்டியின் 73 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஜார்டன்பாஸ் அபாரமாக கோல் அடித்து ஸ்கோரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் உயர்த்தினார். இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை அடுத்து இந்திய வீரர்கள் கடுமையாக போராடியும் பதில் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்ற பிறகும் இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த குரூப்பில் இந்தியா உஸ்பேகிஸ்தான் மற்றும் சிரியா என தங்களை விட தர வரிசையில் முன்னிலையில் உள்ள அணியை தான் இந்தியா எதிர்கொள்ளப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.