நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் ரப்தி ஆற்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேபாள்கஞ்சிலிருந்து காத்மாண்டு நோக்கிச் சென்ற பேருந்து பகலுபாங்கில் உள்ள ராப்தி நதி மீதான பாலத்தில் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு இந்தியர்கள் உள்பட 12 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்துள்ள 23 நபர்கள் கோகல்பூரில் உள்ள நேபாள்கஞ்ச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் இதுவரை 8 பேர் அடையாளம் காணப்பட் டுள்ளனர். இவர்களில் இந்தியாவின் பிஹாரை சேர்ந்த யோகேந்திர ராம் (67), உத்தரபிரதேசத்தை சேர்ந்த முனே (31) ஆகியோரும் அடங்குவர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை, பேருந்து ஓட்டுநர் லால் பகதூர் நேபாளியை (28) போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.