ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு அயோத்தி நகரம் மிகப்பெரிய சுற்றுலாதளமாக மாறும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை வரவேற்க ஆன்மிக நகரமான அயோத்தி தயாராகி வருகிறது. அயோத்தி நகர ஆணையர் கௌரவ் தயாள், அயோத்தியில் நடைபெற்று வரும் பணிகளை விவரித்தார்.
அப்போது, தூய்மை பணி மிக முக்கியம். எனவே மாநகராட்சி ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளோம்.கழிப்பறைகள் மற்றும் பிற பொது வசதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம்
விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். வாகன நிறுத்துமிட வசதிகளை உருவாக்கி உள்ளோம். வாகனங்களை பெற, பல நிலை பார்க்கிங் வசதிகள் தயார் நிலையில் உள்ளன. பிரான் பிரதிஷ்டா விழா நடைபெறும் இடத்திற்கு அருகில் உணவு விடுதிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனவரி 22-ம் தேதி நெருங்கும் போது பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சுமார் 30,000 பேர் தங்குவதற்கு தனி ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த பணியில் சுற்றுலா கழகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
வரும் நாட்களில் அயோத்தி சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணும் என்று நம்புகிறோம்.அயோத்தியின் தோற்றம் மாறுவதால், நகரத்தின் சுற்றுலா வாய்ப்புகளும் மாறும் என அவர் தெரிவித்தார்.