பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் 12:30 மணிக்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.
நாடு முழுவதிலுமிருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அத்துடுன் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.
2023, நவம்பர் 15, அன்று இப்பயணம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுடன் பிரதமர் தொடர்ந்து உரையாடி வருகிறார். இந்த கலந்துரையாடல் காணொலிக் காட்சி மூலம் ஐந்து முறை (நவம்பர் 30, 9 டிசம்பர் 16, டிசம்பர் 27 மற்றும் 2024 ஜனவரி 8) நடந்துள்ளது. மேலும், கடந்த மாதம் வாரணாசிக்கு சென்றபோது, தொடர்ந்து இரண்டு நாட்கள் (டிசம்பர் 17-18) வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணப் பயனாளிகளுடன் பிரதமர் நேரடியாக உரையாடினார்.
வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணம், அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 15 கோடியைத் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.