ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றையப் போட்டியில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளது.
கத்தாரில் ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்கேற்றுள்ளது.
இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான கத்தார், சீனா, தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் அணிகள் பங்குபெற்றுள்ளது. ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தனது முதல் போட்டியை ஜனவரி 12ஆம் தேதி விளையாடியது. இதில் இந்தியா அணி 0-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியின் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் இன்று இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இப்போட்டியில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.
இந்திய அணி உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வென்று பள்ளிக்கணக்கைத் துவங்கும் நோக்கில் இந்திய அணி தயாராகி வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்கவுள்ளது.
இந்த போட்டிக்கு முன்னதாக சிரியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 5 மணிக்குத் தொடங்கவுள்ளது. இந்தியா போட்டிக்குப் பின்னர் இரவு 11 மணிக்கு ஐக்கிய அமீரகத்திற்கும் பாலஸ்தீனுக்கும் இடையில் போட்டி நடைபெறவுள்ளது.
ஏற்கனவே ஆசியக் கால்பந்து கோப்பையை நடத்தும் கத்தார் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.