பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய பலன் அடைந்திருக்கின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பாராட்டி இருக்கிறார்.
அமெரிக்காவில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஆன்டனி பிளிங்கன், “இந்தியாவை அபரிமிதமான வெற்றி பெற்ற நாடாக அமெரிக்கா கருதுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.
பிரதமர் மோடியின் அரசு பல இந்தியர்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் முயற்சியால் அமெரிக்கா – இந்தியா உறவு நெருக்கமாகி இருக்கிறது.
அதிபர் ஜோ பைடன் பதவிகாலத்தில் வெளியுறவுக் கொள்கையில் அடிப்படை உரிமைகள் சார்ந்தும், ஜனநாயகம் சார்ந்தும் கவனம் செலுத்த அமெரிக்கா விரும்பியது. அதன்படியே செயல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கைகள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக மாறும்.
அந்த நாட்டுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் முந்தைய உறவின் அடிப்படையில் கொள்கைகள் அமைக்கின்றன. எனினும், பிரதமர் மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய அளவில் பலன் அடைந்திருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.