இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர் மோடி! - அமெரிக்க பாடகி மேரி மில்பென் புகழாரம்!
Oct 3, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர் மோடி! – அமெரிக்க பாடகி மேரி மில்பென் புகழாரம்!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கும், இந்திய – அமெரிக்க உறவுக்கும் மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, நடைபெற்ற நிகழ்ச்சியின் மேடையில், மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடினார். பின்னர், பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் பெறுவதற்காக அவரது பாதம் தொட்டு வணங்கினார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது பிரதமர் மோடி குறித்து மேரி மில்பென் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்  “அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என்பதை நான் உறுதியாக சொல்வேன். அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதை காண இங்கு பலரும் விரும்புகின்றனர். இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர் அவர்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும், ஏன் உலகத்துக்கே கூட இது முக்கியமான ஒரு தேர்தல் காலகட்டமாக இருக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். குடிமக்களாக நம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த தேர்தல் காலகட்டத்தில் உங்கள் குரல் கேட்கவேண்டும் என்றும், நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் இருக்கும் என் அன்புக்குரிய குடும்பங்களை நான் ஊக்குவிக்கிறேன்.

நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர் என்பதில் எந்த ரகசியமும் இல்லை. அது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்தியாவும், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுக்கும் பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர் என்று நான் நம்புகிறேன். குடிமக்களாக நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி நம்மிடம் உள்ளது.

அனைத்து மக்களுக்கும் ஏற்ற சிறந்த கொள்கைகளை கொண்டு வரும் அதிகாரம் நம்மிடம் உள்ளது. எனவே இந்த தேர்தல் காலத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களின் குரலையும் வாக்கையும் ஓங்கி ஒலிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான மோடியின் கொள்கைகள் நிச்சயமாக பெண்களை தலைமைத்துவத்தில் அதிகமாக ஊக்குவித்துள்ளன.

திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக உருவானது, மற்றும் அமைச்சரவையில் அதிக பெண் தலைவர்களை வந்ததற்கும் பலவழிகளில் அவர்தான் காரணம். அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதன் மூலம் அமெரிக்க – இந்திய உறவுகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

Tags: PM ModiAmerican singer Mary Millben
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதி வளாகத்தின் சாவி: ஆட்சியரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ராமர் கோவில் சீதாதேவிக்காக தமிழகத்தில் இருந்து புடவை அனுப்பப்பட்டுள்ளது!

Related News

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies