இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 331 ஆக உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக குறைய தொடங்கியது. நேற்று 305 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 331 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி கொரோனா பாதிப்பில் இருந்து 461 பேர் மீண்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 87 ஆயிரத்து 392 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் தற்போது வரை 220 கோடியே 67 இலட்சத்து 83 ஆயிரத்து 941 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.