இந்தியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் சகா நாட்டவரான பிரியன்ஷூ ரஜாவத்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டெல்லியில் இந்திய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் பங்குபெற்றனர்.
இவர்கள் இருவரும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் நேருக்கு நேர் மோதினர். இதில் ஹெச்.எஸ்.பிரணாய் 20 – 22, 21 -14, 21 -14 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான பிரியன்ஷூ ரஜாவத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டி சுமார் ஒருமணிநேரம் 16 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் ஹெச்.எஸ்.பிரணாய் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபேயின் லியு சிங் யாவ் மற்றும் யாங் போ ஹான் ஜோடியுடன் விளையாடியது.
இதில் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-14, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.