அயோத்தி இராம் லல்லா தரிசனம்: இன்றே கடைசி நாள்... இனி 22-ம் தேதிதான்!
Sep 20, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராம் லல்லா தரிசனம்: இன்றே கடைசி நாள்… இனி 22-ம் தேதிதான்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 05:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆகவே, கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக புதிதாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிரான் பிரதிஷ்டை விழாக்கள் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கின்றன.

இதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. எனினும், பிரான் பிரதிஷ்டைக்கான முன்னேற்பாடு பூஜைகள் கடந்த 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றன.

அதேசமயம். கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் மேற்பார்வையில் அயோத்தியில் பிரான் பிரதிஷ்டைக்கு முந்தைய சடங்குகள் ஜனவரி 21-ம் தேதி வரை தொடரும். ஆகவே, நாளை முதல் 22-ம் தேதி வரை கோவில் மூடப்பட்டிருக்கும். எனவே, பக்தர்கள் தரிசனம் மூடப்பட்டிருக்கும்.

இதனால், இராம் லல்லாவை தரிசனம் செய்ய இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இராம் லல்லாவை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள், அயோத்தியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றன.

பக்தர்கள் தங்குவதற்கும், உணவு மற்றும் பயணம் செய்வதற்குமான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இதனிடையே, தேவ பிரபோதன், ஔஷத அதிவாஸ், க்ரிதா அதிவாஸ், குண்ட பூஜன் மற்றும் அக்னி குண்ட ஸ்தாபனத்தை உள்ளடக்கிய பல பிரான் பிரதிஷ்டை சடங்குகள் இன்று நடத்தப்பட்டன.

இது ஒருபுறம் இருக்க, பிரான் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி சென்றார். அங்கு, கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் பிரான் பிரதிஷ்டைக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags: DevoteesRam TempleAyodyaPran Pratishtha ceremony
Share
Tweet
SendShare
Previous Post

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் – தி.மு.க. எம்.எல்.ஏ கருணாநிதி கைது?

Next Post

இந்தியா ஓபன் டென்னிஸ் : எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies