'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் எப்போது?
Sep 20, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது?

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 05:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட உள்ளதாக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிகர் விக்ரமை வைத்து கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி படம் ‘துருவ நட்சத்திரம்’.

இப்படத்தில் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, சிம்ரன், விநாயகன் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே வெளிவராமல் இருந்த இந்த படம் கடந்த நவம்பர் 24ல் வெளியாக இருந்தது. ஆனால் வெளிவரவில்லை.

ஆனால், இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘சிம்புவை நாயகனாக வைத்து “சூப்பர் ஸ்டார்” என்ற படத்தை இயக்குவதற்காக, கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்.

அதற்கு முன்பணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ. 2.40 லட்சம் அளிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை.

எனவே எங்களிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பணத்தை திரும்பக் கொடுக்கும்பட்சத்தில், படத்தை வெளியிடலாம் என்று கடந்தாண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பணத்தைத் திரும்ப செலுத்தாததால், இதுவரை ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் வழக்கை 3 வாரம் தள்ளிவைக்க கோரினார். இதையடுத்து, விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளி வைத்தது நீதிமன்றம்.

Tags: When is 'Pole Star' releasing?actor vikram
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா ஓபன் டென்னிஸ் : எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்!

Next Post

2035-க்குள் பாரதிய விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies