உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும் மிகப்பெரிய லட்டு இன்று அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தடைந்துள்ளது.
உத்திரப் பிரதேச மாநில அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரம் செய்து வருகிறது.
ஜனவரி 22-ம் தேதியை சிறப்பாக கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் சிறப்பு பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய 1265 கிலோ எடையுள்ள லட்டு பிரசாதம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்ததுள்ளது.
அயோத்தி வந்த மாபெரும் லட்டு பிரசாதம்!
ஐதராபாத்தை சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர் ராமர் கோவிலுக்கு 1,265 கிலோ லட்டு தயாரித்துள்ளார். இந்த லட்டு தயாரிக்க சுமார் 30 பேர் 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்தனர். ஹைதராபாத்தில் இருந்து சாலை வழியாக அயோத்திக்கு லட்டு கொண்டு வரப்பட்டன. இதில், பெரிய பிரவுனி முந்திரி, பாதாம் மற்றும் பிற பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த லட்டு உடையாத வகையில் தயாரிக்கப்படுகிறது.
இந்த லட்டு கெட்டுப் போகாமல் இருக்க ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கொண்டு வந்தனர். இந்த பிரவுனிகளின் சிறப்பு என்னவென்றால், அவை 1 மாதம் வரை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உலகின் மிகப்பெரிய பாகுபலி பூட்டு!
அலிகாரைச் சேர்ந்த பூட்டு தொழிலாளி சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மணி தேவி ஷர்மா ஆகியோர் இந்த பூட்டை ராம் மந்திருக்கு செய்து கொடுத்துள்ளனர். இந்த பூட்டின் மொத்த எடை 400 கிலோ மற்றும் அதன் வளைவு கொண்ட இரும்பின் எடை 30 கிலோ ஆகும். இது உலகின் மிகப்பெரிய பாகுபலி பூட்டு என்று அழைக்கப்படுகிறது.
சத்ய பிரகாஷ் சர்மா தம்பதியினர் ரூ.1.5 லட்சத்தில் இந்தப் பூட்டை உருவாக்கியுள்ளனர். பூட்டை உருவாக்க ஆறு மாதங்கள் ஆனதாக கூறப்படுகிறது. இந்த பூட்டின் நீளம் 10 அடி, அகலம் 4.5 அடி, தடிமன் 9.5 அங்குலம். தற்போது இந்த பூட்டு அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்ததுள்ளது.