அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து விடுபடும்: அமித்ஷா!
Sep 13, 2026, 03:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து விடுபடும்: அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மோடி அரசின் முயற்சியால் மத்திய ஆயுதப் படையில் கடந்த 9 ஆண்டுகளில் 1.75 லட்சம் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து முற்றிலுமாக விடுபடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூரில் சசாஸ்திர சீமா பலின் (SSB) 60-வது எழுச்சி நாள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். தொடர்ந்து, பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா, தபால் தலையையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டில் நக்சல்கள் நடமாட்டத்தைக் குறைப்பதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்.) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) ஆகியவற்றுடன் சசாஸ்திர சீமா பலின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

சசாஸ்திர சீமா பலின்,  சர்வதேச எல்லைகளைக் காப்பது மட்டுமல்லாமல், நாட்டின் எல்லைப் பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றுகிறது. எல்லைப் பாதுகாப்புடன், சசாஸ்திர சீமா பலின், தனது முயற்சிகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் உறுதி செய்கிறது.

எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை மீட்டெடுப்பதில் சசாஸ்திர சீமா பலின் வீரர்களின் பங்கு பாராட்டத்தக்கது. மோடி அரசின் முயற்சியால் மத்திய ஆயுதப் படையில் கடந்த 9 ஆண்டுகளில் 1.75 லட்சம் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குற்றவியல் சட்டங்கள் தொடர்பான 3 முக்கிய மசோதாக்களில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் விரைவான நீதியை உறுதி செய்யும். இனிமேல் 3 ஆண்டுகளுக்குள் எஃப்.ஐ.ஆர். மீதான பிரச்சனை தீர்க்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து விடுபடும்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

Tags: Amit ShahHome ministerSashastra Seema Bal60th Raising Day
Share
Tweet
SendShare
Previous Post

உலகின் மிகப்பெரிய பூட்டு – லட்டு! அயோத்தியை அடைந்தது!

Next Post

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி : உற்சாக வரவேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies