ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனம் விடுமுறை அறிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ஆம் தேதி நடைபெறுகிறது.இதனையடுத்து அன்றைய தினம் மகாராஷ்டிராவில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் திரிபுரா அரசுகளும் மாநிலங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை மூடப்படும் என்று அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 22ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனம் விடுமுறை அறிவித்துள்ளது. அயோத்தி ராமர் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஸ் அம்பானி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.