ராமேஸ்வரம் கல்யாண கோதண்ட ராமர் சுவாமி திருக்கோவிலில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூய்மை பணியில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், பகவான் ஶ்ரீராமர் திருவுருவச் சிலை அயோத்தியில் நாளை ஜனவரி 22 அன்று, பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழகம் முழுவதும், 5,000 வழிபாட்டுத் தலங்களைத் தூய்மை செய்யும் பணியில் தமிழக பாஜக சகோதர சகோதரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் கல்யாண கோதண்ட ராமர் சுவாமி திருக்கோவிலில், தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன் பாலகணபதி, ஏபி.முருகானந்தம், ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் எம்.நாச்சியப்பன், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தரணி ஆர். முருகேசன் மற்றும் தமிழக பாஜக சகோதர சகோதரிகளுடன், ஆலயத் தூய்மைப் பணியில் ஈடுபட்டோம்.
தமிழகம் முழுவதும், பாஜக சகோதர சகோதரிகளுடன் பொதுமக்களும் இந்தத் திருப்பணியில் பங்கேற்று, ஆலயங்களைச் சுத்தம் செய்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.