அஸ்ஸாம் மாநிலத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அனைத்து சர்ச்சைகளும் மோதல்களும் முடிவுக்கு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு துடிப்பான வடகிழக்குக்காக உழைத்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியிருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அருப் குமார் தத்தா எழுதிய “அஸ்ஸாமின் பிரேவ்ஹார்ட் லச்சித் பர்புகான்” என்கிற புத்தக வெளியீட்டு விழா கௌகாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவா சர்வதேச அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை நம்புகிறார்.வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து சமூகத்தினரின் நலனுக்காக பாடுபடுகிறார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அனைத்து சர்ச்சைகளும் மோதல்களும் முடிவுக்கு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு துடிப்பான வடகிழக்குக்காக உழைத்து வருகிறது பல மொழி பேசுவது நமது நாட்டிற்கு பலவீனத்தை விட பலமாக உள்ளது.
“லச்சித் பர்புகான்” அஸ்ஸாமுக்கு மட்டுமான சின்னம் அல்ல. அவர் ஒரு தேசிய வீரன். அவரது மகத்துவத்தையும், வீரத்தையும் அனைத்து இந்தியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.
நம் நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களிலும் அவரைப் பற்றிய புத்தகங்கள் இருக்க வேண்டும். லச்சித் பர்புகானை ஊக்குவித்து சரியானதை வழங்குவதற்கான முயற்சிக்காக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் முயற்சியை பாராட்டுகிறேன்” என்றார்.
“அஸ்ஸாமின் பிரேவ்ஹார்ட் லச்சித் பர்புகான்” என்கிற புத்தகம் மாநில அரசால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, அட்டவணைப்படுத்தப்பட்ட 24 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.