அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் லக்னோ சென்றடைந்தார்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவரான பால ராமா் சிலை திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இந்த வரலாற்று நிகழ்வில் பிரதமா் மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய பணியாளா் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இதேபோல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ராமர் கோவில் விழாவில்பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் இன்று டெல்லியில் இருந்து லக்னோ சென்றார். அவருக்கு விமானநிலையத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து அயோத்தி செல்லும் அவர் நாளை நடைபெறும் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கிறார்.