ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தமிழக மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தீபம் ஏற்றி கொண்டாடுமாறு ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறவுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“நமது தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீ ராம பக்தியில் மூழ்கியுள்ளது. நமது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து உணர்ந்திருக்கிறேன்.
"நமது தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீ ராம பக்தியில் மூழ்கியுள்ளது. நமது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து உணர்ந்திருக்கிறேன். 'ஸ்ரீ ராமர்' பாரதத்தின் தேசிய அடையாளம். நாளை ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ஸ்ரீ ராமர்… pic.twitter.com/3I8I2VZ5CJ
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 21, 2024
‘ஸ்ரீ ராமர்’ பாரதத்தின் தேசிய அடையாளம். ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ஸ்ரீ ராமர் கோயிலை பெறும். இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும்.
தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.