இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!
Sep 14, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 22, 2024, 09:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று மதியம் நடைபெறவிருக்கும் நிலையில், இராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல் விடுத்த இன்டெகாப் அலாம் என்கிற நபரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை விழா ஆகியவை இன்று மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் நடைபெறவிருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்கிறார். இதையொட்டி, நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8,000 வி.வி.ஐ.பி.க்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, அயோத்தி நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த சூழலில், அயோத்தி கோவிலை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அதாவது, பொதுமக்கள் அவசர உதவிக்காக அழைக்கும் காவல்துறையின் 112 எண்ணுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்திருக்கிறது.

மறுமுனையில் பேசிய நபர், தனது பெயர் சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் அயோத்தி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து, மர்ம தொலைபேசி அழைப்பில் பேசிய நபரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து பீகார் மாநிலம் அராரியா மாவட்ட எஸ்.பி. அசோக் குமார் சிங் கூறுகையில், “ஜனவரி 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர், பொதுமக்கள் அவசர உதவி கோர பயன்படுத்தும் 112 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து, தனது பெயர் சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறினார்.

மேலும், ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் அயோத்தி இராமர் கோவிலை வெடிக்கச் செய்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். பின்னர், அந்த அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்து, அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

அந்த நபர், பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த இன்டெகாப் அலாம்.  21 வயதாகும் இவர் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை. அதேசமயம் மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல தெரிகிறார்” என்று கூறினார்.

Tags: ArrestBiharRam TempleAyodyaBomb Thread
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகளில் முன் தீபம் ஏற்றி கொண்டாடுங்கள்! – ஆளுநர் ரவி வேண்டுகோள்

Next Post

சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு – ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies