சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், பக்தர்களுடன் அமர்ந்து, அயோத்தி ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிரதிஷ்டையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டுகளித்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கோடிக்கணக்கான பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. புண்ணிய பூமியான அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
புனிதமான இந்த வைபவத்தை, சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், பக்தர்களுடன் அமர்ந்து, பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தோம்.
மாநிலச் செயலாளர்கள் திரு @VinojBJP, திருமதி @SumathiVenkat18, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு @kvanand19 ஆகியோர் உடனிருந்தனர்.… pic.twitter.com/FktmOsaIga
— K.Annamalai (@annamalai_k) January 22, 2024
புனிதமான இந்த வைபவத்தை, சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், பக்தர்களுடன் அமர்ந்து, பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தோம். மாநிலச் செயலாளர்கள் வினோஜ் பி செல்வம், சுமதி வெங்கடேஷ், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் கே. விஜய் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர் தெரிவித்துள்ளார்.