பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0. என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 2.89 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் மத்திய அரசு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0. என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் கடந்த 2016ல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக 8000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஏழ்மையில் உள்ள குடும்ப தலைவியருக்கு, காஸ் அடுப்பு, காஸ் இணைப்பிற்கான டிபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர் மற்றும் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, நாடு முழுதும் கூடுதலாக, 75 லட்சம் இலவச காஸ் இணைப்பு வழங்க ஒப்புதல் அளித்து, 1,650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்காக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 2023 அக்டோபரில் இருந்து புதிய பயனாளிகளை கண்டறிந்து, காஸ் இணைப்பு வழங்கி வருகின்றன.