அயோத்தி ராமர் கோவில் விழா : தமிழகத்தில் களைகட்டிய கொண்டாட்டம்!
Oct 25, 2025, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் விழா : தமிழகத்தில் களைகட்டிய கொண்டாட்டம்!

Web Desk by Web Desk
Jan 22, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புண்ணிய பூமியான அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலையை, பாரதப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

இதன் மூலம் கோடிக்கணக்கான பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதந் மூலம் இந்தியாவில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டையொட்டி, நாடு முழுவதும் பக்தி பரவசம் மற்றும் கோலாகல கொண்டாட்டம் நடைபெற்றது. குறிப்பாக, தமிழகத்தில், மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அயோத்தியில் நடைபெற்ற புனித வைபவத்தை, சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், பக்தர்களுடன் அமர்ந்து, பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரதகானா சபாவில் நடைபெற்ற சென்னையில் அயோத்தி என்ற நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் இசையமைப்பாளரும், எம்பியுமான இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

கோவை தெற்கு தொகுதி மேட்டுப்பாளையம் சாலை காமராஜபுரம் பகுதி ஶ்ரீ ராமர் கோவிலில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னை ஸ்ரீவல்லப விநாயகர் கோவிலில் நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியில், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகரஜான் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், இந்து முன்னணி அமைப்பு சார்பில், பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் இராமர் மடம் அருகே உள்ள பெருமாள் திருக்கோவிலில், ஆராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா, மதுரை ஆர்.எஸ்.எஸ். அலுவலக காரியாலயத்தில், பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. அப்போது, கோ பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதேபோல, மதுரையில் கேசவ சேவா கேந்திரத்தில் ராமர் கோவில் திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில், அயோத்தி பால ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.

இராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் கோவிலில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் அதன் நிர்வாகிகள், ராமர் பாடல்களை பாடி வழிபட்டனர்.

பெரம்பலூரில் உள்ள மதன கோபால சுவாமி திருக்கோவிலில், ராம பக்தர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து பஜனை பாடி, ராமரை போற்றி வணங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் பேசிப்பாறை அருள்மிகு பேச்சியம்மன் கோவிலில், மாற்றுத்திறனாளி தேவசகாயம் என்பவர், குத்துவிளக்கு ஏற்றிவைக்க, பிராணப் பிரதிஷ்டை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் அமராவதிபுதூர் ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது, பக்கதர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டையில், அயோத்தி பால ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு ராமநாமம் பாடினர்.

திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகே அயோத்தியில் பால ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, வழக்கறிஞர்கள் பக்தி பரவத்துடன் வழிபாடு நடத்தினர்.

கோவை தண்டு மாரியம்மன் கோவிலில், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில், வேணுகோபால சுவாமி திருக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிராணப் பிரதிஷ்டையை யொட்டி, திருப்போரில் உள்ள திருக்கோவிலில் எல்இடி தொலைக்காட்சி மூலம் பொது மக்களுக்கு அயோத்தி பால ராமர் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பொதுமக்கள் பக்தி பரவத்துடன் கண்டனர்.

நெல்லை டவுன் இந்து முன்னணி சார்பில் அயோத்தி பால ராமர் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

சென்னை மேற்கு மேம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் இந்து முன்னணி சார்பில், பாஜனை பாடப்பட்டது. அப்போது, பக்தர்களும், பொது மக்களும் ரதவீதி வழியாக வீதி உலா வந்தனர்.

கானாடுகாத்தான் வெட்டிவயல் ஆஞ்சநேயர் திருக்கோவிலில், ராமர் கும்பாபிஷேகத்தை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் அனையூரில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில், ராமர் கோவில் சிறப்பு விழா சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதபோல, தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் ஏராளமான பொது மக்கள் பக்தி பரவத்துடன் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags: ramar celebrationtamilnaduspecial poojatamilnadu templesAyothi ramar temple live
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் விழா : கயானாவில் களைகட்டிய கொண்டாட்டம்!

Next Post

குழந்தை இராமரும் குதூகல இந்தியாவும்! – அண்ணாமலை

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies