பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, நேதாஜியின் வாழ்க்கை மற்றும் தீரத்துக்குப் பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Greetings to the people of India on Parakram Diwas. Today on his Jayanti, we honour the life and courage of Netaji Subhas Chandra Bose. His unwavering dedication to our nation's freedom continues to inspire. pic.twitter.com/OZP6cJBgeC
— Narendra Modi (@narendramodi) January 23, 2024
“பராக்கிரம தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துகள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, அவரது வாழ்க்கை மற்றும் தீரத்திற்கு மரியாதை செலுத்துவோம்.
நமது தேசத்தின் சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.