தேசம் எப்போதும் நேதாஜியை மிகுந்த நன்றியுடன் நினைவு கூறும் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான பராக்கிரம் திவாஸ் தினத்தில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்! இந்தியாவின் சுதந்திரத்திற்காக நேதாஜி அசாதாரண அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.
I pay my tributes to Netaji Subhas Chandra Bose on his birth anniversary observed as Parakram Diwas! Netaji demonstrated extraordinary commitment to the cause of India's freedom. His unparalleled courage and charisma inspired Indians to fight fearlessly against colonial rule. His…
— President of India (@rashtrapatibhvn) January 23, 2024
அவரது ஈடு இணையற்ற தைரியம் இந்தியர்களை காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அச்சமின்றி போராட தூண்டியது. அவரது சக்திவாய்ந்த ஆளுமை நமது சுதந்திரப் போராட்டத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தேசம் எப்போதும் நேதாஜியை மிகுந்த நன்றியுடன் நினைவு கூறும் எனத் தெரிவித்துள்ளார்.