எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை: திரௌபதி முர்மு அறிவுரை!
Jul 5, 2025, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை: திரௌபதி முர்மு அறிவுரை!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியிருக்கிறார்.

கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட 6 துறைகளில் சாதனை படைக்கும் 5 முதல் 18 வயது வரையுடைய சிறுவர், சிறுமிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 குழந்தைகளுக்கு விருது வழங்கினார். இவர்கள், 2 ஆர்வமுள்ள மாவட்டங்கள் உட்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “இந்த விருது வழங்கும் விழா இளம் சாதனையாளர்களின் அற்புதமான திறன்களையும், திறமைகளையும் ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பாகும். குழந்தைகளுக்கு பல்துறை திறமைகள் இருக்கின்றன. மேலும், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் அவர்கள் தமக்கான அடையாளத்தை உருவாக்குவதற்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது.

குழந்தைகளின் திறமையையும், ஆற்றலையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு சரியான வழியைக் காட்டுவது நமது கடமை. இன்று இந்தியாவிடம் பெருமளவிலான இளைஞர்கள் என்ற வகையில் விலைமதிப்பற்ற வளம் இருக்கிறது. இந்த வளமானது இந்தியா மட்டுமன்றி முழு உலகத்தின் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கை வகிக்க முடியும்.

இளம் தலைமுறையினரிடம் உடல் செயல்பாடுகள் குறைந்து வருகிறது. குறைவான உடல் செயல்பாடுகளால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் அரிதாக இருந்த பல நோய்கள் இன்று அதிகரித்து வருகிறது. ஆகவே, குறைந்த பட்சம் ஒரு விளையாட்டையாவது கற்று, அதில் பங்கேற்க வேண்டும். குழந்தைகள் விளையாட்டை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், விளையாட்டு அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்” என்றார்.

இந்நிகழ்வின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இத்துறையின் இணை அமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாய் ஆகியோர் உடனிருந்தனர். விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார். அதேபோல, விருது பெற்றவர்கள் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்பார்கள்.

Tags: PresidentRashtriya Bal PuraskarDroupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

சூரிய சக்தி மேற்கூரை அமைப்பு! – தேசிய அளவிலான இயக்கத்தைத் தொடங்கப் பிரதமர் மோடி உத்தரவு!

Next Post

இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றம்!

Related News

டெல்லி : 3 பேர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!

உத்தரப்பிரதேசம் : இரும்பு கதவு விழுந்து காவலாளி பலி – சிசிடிவி வெளியீடு!

தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை : 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை : சமூக வலைத்தள வாசிகள் கிண்டல்!

புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

கடலூர் : என்எல்சியின் 24-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு!

மகாராஷ்டிரா : மராத்தி கற்க முடியாது என கூறிய முதலீட்டாளரின் நிறுவனம் சூறை!

நீலகிரி : சாலையில் சென்ற காரை முட்டி சேதப்படுத்திய காட்டு யானை!

பீகாரில் பாஜக மூத்த தலைவர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை!

புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம் : பியூஷ் கோயல்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies