குஜராத்திகள் குறித்து அவதூறு: மன்னிப்புக் கேட்ட பீகார் துணை முதல்வர்!
Sep 11, 2025, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்திகள் குறித்து அவதூறு: மன்னிப்புக் கேட்ட பீகார் துணை முதல்வர்!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்திகள் குறித்து அவதூறாகப் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அவர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆகவே, வழக்கைத் தொடர்வது குறித்து பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பவர், லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ். இவர், கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி நடந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசினார்.

மேலும், குஜராத்திகள் மட்டுமே நாட்டில் ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களது தவறுகள், மோசடிகள் மன்னிக்கப்படுகின்றன என்று கூறினார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த ஹரேஷ்பாய் பிராணசங்கர் மேத்தா என்பவர் தேஜஸ்வி யாதவ் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில், வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தேஜஸ்வி யாதவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, குஜராத் உயர் நீதிமன்றத்தில் தேஜஸ்வி யாதவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குஜராத்திகள் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேச்சுக்கு தேஜஸ்வி யாதவ் மன்னிப்புக் கோரி இருக்கிறார். ஆகவே, வழக்கைத் தொடர வேண்டுமா என்று 29-ம் தேதிக்குள் புகார்தாரர் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர்.

மேலும், தேஜஸ்வி மன்னிப்புக் கேட்டிருப்பதால், நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Tags: BiharTejashwi Yadav!GujratisDeputy CMapologiszed
ShareTweetSendShare
Previous Post

உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

Next Post

இந்தியாவில் 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies