மிசோராம் மாநிலத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.
மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமாக சிறிய ரக விமானம் ஒன்று மிசோராம் மாநிலத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் விமானி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில் லெங்பூயி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முற்பட்டதாக தெரிகிறது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து அங்கு மீட்புப்படையினர் விரைந்தனர்.
இந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.அவர்கள் சிகிச்சைக்காக லெங்பூயி (Lengpui) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.