இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
Sep 28, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 12:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது. ஆகவே, எல்லா சர்ச்சைகளையும் விட்டுவிட்டு நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் பிறகு, அயோத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோகன் பகவத் பேசுகையில், “அயோத்தி இராமர் சிலை பிரதிஷ்டைக்காக பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே விரதம் இருந்து தவம் செய்தார். இனிமேல் நாம் அனைவரும் விரதமிருந்து தவம் செய்ய வேண்டும்.

அயோத்தியில் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவின் சுயமரியாதை திரும்பி இருக்கிறது. மேலும், புதிய இந்தியாவின் அடையாளமாக மாறி இருக்கிறது. ஏராளமான மக்களின் தவத்தால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இராமர் இராம ஜென்ம பூமிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

ஆகவே, அம்மக்களின் உழைப்புக்கும், தியாகத்துக்கும் நான் தலைவணங்குகிறேன். அதேசமயம், இராமர் ஏன் இராம ஜென்ம பூமியை விட்டுப் போனார் என்று பார்த்தால், அயோத்தியில் மோதல் நிலவியதுதான் காரணம். தற்போது இராம இராஜ்ஜியம் மீண்டும் தொடங்கி விட்டது.

எனவே, மக்களாகிய நாம் அனைத்து சர்ச்சைகளையும் விட்டு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இராமர் எங்கும் இருக்கிறார் என்பதை அறிந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையாக வாழ்வதே ஹிந்து மதத்தின் உண்மையான நடைமுறை.

நாம் நமது நாட்டை உலகத்தின் தலைமையாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், தங்களது வருமானத்தில் குறைந்தபட்சத்தை வைத்துக் கொண்டு, மீதியை உதவியாகத் திரும்பக் கொடுக்க வேண்டும். இதுதான் இரக்கத்தின் பொருள். ஆகவே, யாரிடமாவது துக்கத்தையும், வலியையும் கண்டால் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

Tags: RSS Chiefmohan bhagwatRam TempleAyodyainaguration
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்! – பிரதமர் மோடி

Next Post

மிசோராமில் விமான விபத்து : 6 பேர் காயம்! 

Related News

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட் – நயினார் பாராட்டு!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா?  – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies