அயோத்தியில் ராமர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியைத் தனது இல்லத்தில் ராம ஜோதியை ஏற்றி, பிராத்தனை செய்தார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று (ஜனவரி 22-2024) பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோயிலின் கருவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தை ராமர் சிலைக்கு சடங்குகள், பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டியல், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் முன்னிலையில் சிலை பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்பட்டது.
“குழந்தை ராமர் இன்று அயோத்திதாமில் உள்ள தமது பிரமாண்டமான ஆலயத்தில் அமர்ந்துள்ளார். இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், ராம ஜோதியை ஏற்றி, தங்கள் வீடுகளிலும் அவரை வரவேற்குமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
रामज्योति! #RamJyoti pic.twitter.com/DTxg2QquTT
— Narendra Modi (@narendramodi) January 22, 2024
இந்நிலையில், அயோத்தியிலிருந்து புது டெல்லி வந்த பிரதமர் மோடி, தனது இல்லத்தில், ராம ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும் தனது இல்லத்தில் உள்ள அயோத்தி குழந்தை ராமர் திருவுறுப்படத்திற்கு விளக்கை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பிராத்தனை செய்தார்.