சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி வசுந்தரா தேவி மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சுதந்திரப் போராட்ட வீரரும், கல்வியாளரும், தமிழக பாஜக முதல் மாநிலத் தலைவருமான அமரர் கே. நாராயண ராவ் அவர்களது மனைவியார் வசுந்தரா தேவி கடந்த 21.01.2024 அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளித்தது.
சுதந்திரப் போராட்ட வீரரும், கல்வியாளரும், @BJP4Tamilnadu முதல் மாநிலத் தலைவருமான அமரர் கே. நாராயண ராவ் அவர்களது மனைவியார் திருமதி வசுந்தரா தேவி கடந்த 21.01.2024 அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளித்தது.
இன்று அவர்களது இல்லத்திற்கு, செங்கல்பட்டு வடக்கு… pic.twitter.com/p5iIjkQQcA
— K.Annamalai (@annamalai_k) January 23, 2024
இன்று அவர்களது இல்லத்திற்கு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் வேதசுப்ரமணியம் அவர்களுடன் சென்று, வசுந்தரா தேவி அவர்களது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினோம். அவரது குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பாக ஆறுதல்களைத் தெரிவித்துக் கொண்டோம்.