ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
Mar 15, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டிற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சுரங்கத்துறை அமைச்சர் பதவியையும் இவரே தன் வசம் வைத்திருக்கிறார். அந்த வகையில், தனது உதவியாளருக்கு முறைகேடாக ஹேமந்த் சோரன் சுரங்கம் ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், இந்த விவகாரத்தில் ஹேமந்த் சோரன் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறையுமே ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.

இதையடுத்து, 8-வது முறையாக மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அப்போது, தன்னால் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்து பதிலளிக்க முடியாது. அதேசமயம், எனது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினால், ஒத்துழைப்புத் தருகிறேன் என்று ஹேமந்த் சோரன் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. எனினும், கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பின்னர், அதிரிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தற்போது ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த சம்மனில், வரும் 27 முதல் 31-ம் தேதிக்குள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கேள்விளுக்கு பதிலளிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: summonedEnforcement DirectorateJharkhandCM Hemant Soren
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடமில்லாதது அபத்தம்: எலான் மஸ்க்

Next Post

‘ஜெய் ஸ்ரீராம் இந்தியா ‘ : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் போட்ட பதிவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies